How to brush Baby Teeth Tamil

How to Brush Baby Teeth Tamil | குழந்தைக்கு பல் துலக்குவது எப்படி?
How to Brush Baby Teeth Tamil 🦷

குழந்தையின் பற்களை சரியாக துலக்குவது எப்படி?

How to brush baby teeth Tamil வழிகாட்டி: முதல் பல் முளைத்த நாளிலிருந்து எப்போது, எப்படி, எந்த toothpaste கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பதை எளிமையாகப் பார்க்கலாம்.

WhatsApp-ல் ஆலோசனை பெற
How to brush baby teeth Tamil - குழந்தையின் பற்களை சரியாக துலக்குவது எப்படி?

எப்போது ஆரம்பிக்க வேண்டும்?

“எல்லா பற்களும் முளைத்த பிறகு” என்று காத்திருக்க வேண்டாம்.

🦷

முதல் பல் முளைத்ததும்!

காலை உணவுக்குப் பிறகு மற்றும் இரவு தூங்குவதற்கு முன்—தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள். இரவு brushing மிகவும் முக்கியம்.

சரியான brushing முறை

சிறிய தலை கொண்ட soft-bristle brush பயன்படுத்துங்கள். குழந்தையை உங்கள் முன் அல்லது மடியில் வசதியாக அமர வையுங்கள்.

1

வெளிப்பக்கத்தை துலக்குங்கள்

Brush-ஐ ஈறு ஓரத்தில் சாய்த்து வைத்து, சிறிய வட்டமாக மெதுவாக நகர்த்துங்கள்.

2

உள் பக்கம் மறக்காதீர்கள்

மேல் மற்றும் கீழ் பற்களின் உள்பக்கத்தையும் ஒவ்வொரு பகுதியாய் சுத்தம் செய்யுங்கள்.

3

மெல்லும் பகுதியை தேயுங்கள்

பின் பற்களின் மேற்பகுதியில் உணவு தங்கும் பள்ளங்களை முன்னும் பின்னும் துலக்குங்கள்.

4

2 நிமிடம் போதும்

மேல், கீழ், வலது, இடது என ஒவ்வொரு பகுதிக்கும் சுமார் 30 வினாடி செலவிடுங்கள்.

5

துப்ப சொல்லுங்கள்

பேஸ்டை துப்பச் சொல்லுங்கள். அதிகமாக தண்ணீரால் கொப்பளிக்க வேண்டாம்.

6

பெற்றோர் உதவி அவசியம்

சுமார் 7–8 வயது வரை குழந்தை துலக்கிய பிறகு பெற்றோர் ஒருமுறை சரியாக முடித்துக் கொடுக்கவும்.

சரியாக பல் துலக்குவது எப்படி?

இந்த சுருக்கமான வீடியோவில் brushing முறையைப் பாருங்கள்.

Toothpaste எவ்வளவு?

அளவுதான் முக்கியம். Tube-ஐ குழந்தையிடம் கொடுத்து தானாக பிழிய விடாதீர்கள்.

முதல் பல் முதல் 3 வயது வரை

அரிசி மணி அளவு

1000 ppm fluoride toothpaste-ஐ மிக மெல்லிய smear ஆக மட்டும் பயன்படுத்துங்கள்.

3 முதல் 6 வயது

பட்டாணி அளவு

1000 ppm fluoride paste. பெற்றோர் பார்த்துக்கொண்டே துலக்க வேண்டும்.

இந்தியாவில் கிடைக்கும் 3 நல்ல fluoride pastes

Brand-ஐ விட, tube-ன் பின்புறத்தில் உள்ள fluoride அளவைப் பார்ப்பது முக்கியம்.

செய்ய வேண்டியது / தவிர்க்க வேண்டியது

செய்யுங்கள்

  • காலை, இரவு தினமும் 2 முறை
  • Soft-bristle குழந்தை brush
  • பற்களின் எல்லா பக்கங்களும்
  • 3–4 மாதத்திற்கு ஒருமுறை brush மாற்றுங்கள்
  • முதல் பிறந்த நாளுக்குள் dental visit

தவிர்க்குங்கள்

  • பல் முளைத்தும் paste இல்லாமல் இருப்பது
  • Fluoride இல்லாத “herbal” paste மட்டும்
  • நிறைய toothpaste போடுவது
  • கடினமாக அழுத்தித் தேய்ப்பது
  • இரவு brushing பிறகு பால்/juice கொடுப்பது

பல் மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

பல்லில் வெள்ளை/பழுப்பு புள்ளி, ஓட்டை, வலி, ஈறு வீக்கம், வாய் துர்நாற்றம் தொடர்ந்து இருப்பது அல்லது விழுந்து பல்லில் அடிபடுவது இருந்தால் தாமதிக்க வேண்டாம்.

மேலும் நம்பகமான brushing வழிகாட்டிக்கு: American Dental Association – Healthy Habits for Babies and Kids

உங்கள் குழந்தைக்கு பல் பராமரிப்பு சந்தேகமா?

குழந்தையின் வயது மற்றும் பிரச்சனையை WhatsApp-ல் தெரிவித்து ஆலோசனை அல்லது appointment பெறுங்கள்.

WhatsApp Appointment

Dr. Pradeep Kumar · குழந்தைகள் நல மருத்துவர்
Gheeth Kids Clinic, Kaliakkavilai

பெற்றோருக்கான பொதுவான கல்வித் தகவல். உங்கள் குழந்தையின் dentist/doctor ஆலோசனைக்கு மாற்றாகாது.