Baby Choking First Aid Tamil | Infant Choking & CPR
Baby choking first aid tamil

குழந்தைக்கு உணவு தொண்டையில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? Choking First Aid + CPR

Baby choking first aid tamil என்று தேடும் parents, grandparents மற்றும் teachers தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை first-aid steps இங்கே எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளன.

குழந்தை மூச்சு விட முடியாமல் / மயங்கினால் 108 Ambulance உடனே அழைக்கவும்.

முதலில் இதை வேறுபடுத்துங்கள்

Gagging-ஆ? Choking-ஆ?

Gagging / Mild obstruction குழந்தை இருமலாம், அழலாம் அல்லது சத்தம் எழுப்பலாம். காற்று உள்ளே வெளியே செல்கிறது.

என்ன செய்ய வேண்டும்?
குழந்தையை கவனித்து, இரும அனுமதிக்கவும். First Aid வேண்டாம்.
Severe Choking குழந்தையால் இரும முடியாது, அழ முடியாது, பேச முடியாது அல்லது மூச்சு விட முடியாது. நிறம் நீலமாக மாறலாம்.

இப்போது உடனே first aid தேவை.

1 வயதிற்கு கீழே

Infant Choking: 5 Back Blows + 5 Chest Thrusts

1 வயதிற்கு கீழே உள்ள குழந்தைக்கு:

Infant choking first aid Tamil - 5 back blows and 5 chest thrusts
5 back blows + 5 chest thrusts.
1
குழந்தையை பாதுகாப்பாக பிடிக்கவும் குழந்தையை உங்கள் forearm / thigh மீது face-down நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். தலை chest-ஐ விட கீழாக இருக்கட்டும். Head மற்றும் jaw-ஐ support செய்யவும்.
2
5 Back Blows இரண்டு shoulder blades-க்கு நடுவில் உங்கள் கையின் heel பகுதியால் 5 தெளிவான back blows கொடுக்கவும்.
3
குழந்தையை face-up திருப்பவும் Head மற்றும் neck-ஐ support செய்து, தலையை உடலை விட சற்று கீழாக வைத்துக் கொள்ளவும்.
4
5 Chest Thrusts Chest-ன் நடுப்பகுதியில் sternum மீது 5 chest thrusts கொடுக்கவும்.
5Back Blows
↔
5Chest Thrusts

பொருள் வெளியே வரும் வரை அல்லது குழந்தை unresponsive ஆகும் வரை இந்த cycle-ஐ தொடரவும்.

குழந்தை மயங்கிவிட்டால்

CPR தொடங்குங்கள்

Infant and child CPR Tamil guide
குழந்தை unresponsive ஆகி normal breathing இல்லையெனில் CPR தொடங்க வேண்டும்.
1
Firm, flat surface-ல் படுக்க வையுங்கள் குழந்தை response இல்லாமல், normal breathing இல்லாமல் இருந்தால் lay rescuer pulse தேடி நேரம் வீணாக்க வேண்டாம்.
2
108 Ambulance அழைக்கவும் அருகில் யாராவது இருந்தால் அவரை emergency help அழைக்க சொல்லுங்கள். நீங்கள் தனியாக இருந்தால் phone-ஐ speaker mode-ல் வைத்து உதவி அழைக்கவும்.
3
CPR: 30 chest compressions Chest நடுப்பகுதியில் 30 compressions கொடுக்கவும்.
4
Airway திறந்து வாயைப் பாருங்கள் உணவுப் பொருள் தெளிவாக தெரிந்தால் மட்டும் அகற்றவும். தெரியாத பொருளை விரலால் தேடி blind finger sweep செய்ய வேண்டாம்.
5
2 rescue breaths Airway-ஐ திறந்து 2 breaths கொடுக்கவும்; ஒவ்வொரு breath-லும் chest rise ஆகுமளவு மட்டும் காற்று கொடுக்கவும்.
6
30 : 2 தொடர்ந்து செய்யுங்கள் Object வெளியே வரும் வரை, குழந்தை movement / breathing காட்டும் வரை அல்லது ambulance team பொறுப்பேற்கும் வரை தொடரவும்.

இவை செய்ய வேண்டாம்

Choking நேரத்தில் பொதுவாக செய்யப்படும் தவறுகள்

  • Choking குழந்தைக்கு தண்ணீர் அல்லது உணவு வலுக்கட்டாயமாக கொடுக்க வேண்டாம்.
  • குழந்தையை குலுக்கவோ, கால்களைப் பிடித்து தலைகீழாக தொங்கவிடவோ வேண்டாம்.

Feeding Prevention

Choking risk குறைக்க வீட்டில் செய்யக்கூடியவை

  • குழந்தையை உட்கார வைத்து உணவு கொடுக்கவும்.
  • சாப்பிடும் போது அருகில் நாம் இருக்க வேண்டும்.
  • வயதிற்கு ஏற்ற texture மற்றும் size-ல் உணவு கொடுக்கவும்.
  • Grapes, nuts, hard raw vegetables போன்ற தொண்டையில் சிக்க கூடிய Foods தவிர்க்கவும்
  • குழந்தை ஓடிக்கொண்டோ, விளையாடிக்கொண்டோ உணவு சாப்பிட அனுமதிக்க வேண்டாம்.

மேலும் படிக்க

குழந்தைகளுக்கான Feeding Guides

இந்த page-ல் உள்ள choking மற்றும் pediatric CPR steps American Heart Association pediatric basic life support guidance-ஐ அடிப்படையாகக் கொண்டவை. American Heart Association – Pediatric Basic Life Support

உங்கள் குழந்தைக்கு பொதுவான Feeding Problems இருக்கிறதா?

Food refusal, picky eating, gagging பற்றிய சந்தேகம், puree-யிலிருந்து textured food-க்கு மாற்றுவது, age-appropriate feeding போன்ற non-emergency feeding problems குறித்து ஆலோசனை பெறலாம்.

Starting solids Tamil - baby feeding guidance
Dr. Pradeep Kumar · Paediatrician
Gheeth Kids Clinic, Kaliakkavilai
WhatsApp-ல் Feeding ஆலோசனை கேட்க