Tomato fever treatment in tamil
Tomato Fever Treatment in Tamil – குழந்தைகளுக்கு HFMD வீட்டில் எப்படி பராமரிப்பது?
குழந்தைகளுக்கு பொதுவாக “தக்காளி காய்ச்சல்” என்று அழைக்கப்படும் Hand Foot Mouth Disease (HFMD) வந்தால், வாய்ப்புண், காய்ச்சல் மற்றும் சாப்பிட முடியாத நிலையை வீட்டில் எப்படி கவனிப்பது?
Paediatrician | Gheeth Kids Clinic
HFMD / Tomato Fever என்றால் என்ன?
Hand Foot Mouth Disease என்பது பெரும்பாலும் வைரஸால் ஏற்படும் குழந்தைகளில் பொதுவாக காணப்படும் தொற்று.
குழந்தைக்கு கீழ்க்கண்ட அறிகுறிகள் வரலாம்:
- காய்ச்சல்
- வாயில் வலி அல்லது புண்கள்
- கைப்பத்துகளில் சிவப்பு புள்ளிகள் அல்லது கொப்புளங்கள்
- கால்பாதங்களில் சிவப்பு புள்ளிகள் அல்லது கொப்புளங்கள்
- சாப்பிட அல்லது தண்ணீர் குடிக்க தயக்கம்
Tomato Fever Home Treatment – முதலில் fluids
HFMD-ல் முக்கியமாக கவனிக்க வேண்டியது dehydration. வாய்ப்புண் காரணமாக குழந்தை தண்ணீர் குடிக்க மறுக்கலாம்.
- தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கவும்.
- வயதிற்கு ஏற்றவாறு சிறிது சிறிதாக அடிக்கடி தண்ணீர் கொடுக்கவும்.
- தேவைப்பட்டால் ORS பயன்படுத்தலாம்.
- Room-temperature அல்லது சற்று குளிர்ச்சியான fluids குழந்தைக்கு வசதியாக இருக்கலாம்.
- சாப்பிட மறுத்தால் கட்டாயப்படுத்த வேண்டாம்; fluids முக்கியம்.
HFMD இருக்கும் குழந்தைக்கு என்ன Indian Home Foods கொடுக்கலாம்?
வாய்ப்புண் இருக்கும் போது soft, bland, காரம் மற்றும் புளிப்பு குறைந்த உணவு கொடுத்தால் சாப்பிட எளிதாக இருக்கும்.
மணத்தக்காளி கீரை வாய்ப்புணுக்கு கொடுக்கலாமா?
தமிழ்நாட்டில் மணத்தக்காளி கீரை வாய்ப்புண் இருக்கும் போது பாரம்பரியமாக உணவில் பயன்படுத்தப்படுகிறது.
குழந்தைக்கு ஏற்கனவே இந்த கீரை உணவில் அறிமுகமாகியிருந்தால், நன்றாக கழுவி, முழுமையாக வேகவைத்து, காரம் மற்றும் மசாலா குறைத்து கீரை மசியலாக அல்லது சாதத்துடன் சேர்த்து கொடுக்கலாம்.
வாய்ப்புண் வலி குறைக்க வீட்டில் என்ன செய்யலாம்?
- சற்று குளிர்ச்சியான அல்லது room-temperature உணவு கொடுக்கலாம்.
- சிறிது சிறிதாக அடிக்கடி fluids கொடுக்கவும்.
- மிகவும் சூடான உணவு கொடுக்க வேண்டாம்.
- காரமான உணவு தவிர்க்கவும்.
- புளிப்பான உணவு மற்றும் acidic juices தவிர்க்கவும்.
- குழந்தையை கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்க வேண்டாம்.
HFMD-ல் தவிர்க்க வேண்டிய உணவுகள்
- அதிக காரம் மற்றும் மிளகாய்
- Pickle மற்றும் spicy chutney
- Lemon / orange போன்ற அதிக புளிப்பு உள்ள உணவுகள்
- Acidic fruit juices
- மிகவும் சூடான உணவு மற்றும் drinks
- Chips, murukku போன்ற hard / crispy foods
மற்ற குழந்தைகளுக்கு பரவாமல் எப்படி தடுப்பது?
- கைகளை சோப்பால் அடிக்கடி கழுவவும்.
- Diaper மாற்றிய பிறகு பெற்றோரும் கைகளை நன்றாக கழுவவும்.
- Spoon, tumbler, towel போன்றவற்றை share செய்ய வேண்டாம்.
- Toys மற்றும் அடிக்கடி தொடும் surfaces-ஐ சுத்தமாக வைத்திருக்கவும்.
- உமிழ்நீர் படும் பொருட்களை மற்ற குழந்தைகள் பயன்படுத்த விட வேண்டாம்.
எப்போது உடனடியாக குழந்தை மருத்துவரை அணுக வேண்டும்?
- குழந்தை தண்ணீர் அல்லது பால் குடிக்க முடியவில்லை
- சிறுநீர் மிகவும் குறைந்துள்ளது
- வாய் மிகவும் உலர்ந்துள்ளது
- குழந்தை மிகவும் சோர்வாக அல்லது வழக்கத்திற்கு மாறாக தூக்கமாக உள்ளது
- தொடர்ந்து வாந்தி வருகிறது
- மூச்சுத்திணறல் உள்ளது
- Fits / seizure வருகிறது
- குழந்தை வழக்கம்போல் respond செய்யவில்லை
- காய்ச்சல் தொடர்ந்து அதிகமாக உள்ளது
HFMD-க்கு Antibiotic தேவையா?
HFMD பெரும்பாலும் viral infection. அதனால் எல்லா குழந்தைகளுக்கும் routine antibiotic தேவையில்லை.
குழந்தையை பரிசோதித்த பிறகு bacterial infection இருப்பதாக மருத்துவர் கருதினால் மட்டுமே antibiotic தேவைப்படலாம்.
குழந்தையின் அறிகுறிகள் குறித்து சந்தேகமா?
HFMD-ல் முக்கியமானது குழந்தை fluids எடுத்துக்கொள்கிறதா, dehydration இருக்கிறதா என்பதை கவனிப்பது.
Gheeth Kids Clinic
Dr. Pradeep Kumar
Paediatrician