1 year baby food tamil

How to Make Baby Gain Weight Fast

How to Make Baby Gain Weight : குழந்தை எடை அதிகரிக்க ஆரோக்கியமான, பாதுகாப்பான இயற்கை வழிகள்

உணவு அட்டவணை

ஒரு குழந்த நல மருத்துவராக (Pediatrician), பல பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் எடையைப் பற்றிக் கவலைப்படுவதை நான் பார்க்கிறேன். ஆனால் உண்மை மிகவும் எளிமையானது: ஒவ்வொரு குழந்தையும் தங்கள் சொந்த வேகத்தில் வளர்கிறார்கள். உங்கள் குழந்தைக்குத் தேவை மற்றவர்களுடனான ஒப்பீடு (Comparison) அல்லது “Weight-gain syrups” அல்ல. அவர்களுக்குத் தேவை சரியான ஊட்டச்சத்து (Nutrition), நல்ல உணவுப் பழக்கம் மற்றும் பெற்றோரின் பொறுமை.

குழந்தையின் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கச் செய்ய, மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் குழந்தையை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். 

IYCF முக்கிய வழிமுறைகள் (1 வயது குழந்தைக்கு):

  • உணவு வேளைகள்: தினமும் 3 வேளை முக்கிய உணவு (Breakfast, Lunch, Dinner) மற்றும் 2 வேளை சிற்றுண்டி (Snacks) கொடுப்பது அவசியம்.
  • சக்தி நிறைந்த உணவுகள்: குழந்தையின் எடை மற்றும் வளர்ச்சிக்கு நெய், முட்டை, பருப்பு மற்றும் அசைவ உணவுகளைக் (Non-veg) கண்டிப்பாகச் சேர்க்கவும்.
  • Family Pot Feeding: குழந்தைக்குத் தனியாகச் சமைக்க வேண்டாம். வீட்டில் பெரியவர்கள் சாப்பிடும் உணவையே காரம் குறைத்து, மென்மையாகக் கொடுக்கவும்.
  • உணவின் பதம் (Texture): மிக்ஸியில் அரைப்பதையோ, கஞ்சியாகக் கொடுப்பதையோ 1 வயதுக்குப் பிறகு நிறுத்த வேண்டும். உணவை மென்மையாக மசித்து அல்லது சிறு துண்டுகளாகக் (Small pieces) கொடுக்கவும்.
  • Finger Foods: குழந்தை தானாகக் கையில் எடுத்துச் சாப்பிடப் பழகுவதற்கு வாழைப்பழம், வேகவைத்த காய்கறித் துண்டுகள் (கேரட், உருளை) அல்லது மென்மையான பழங்களைத் தினமும் கொடுக்கவும்.
  • இரும்புச்சத்து (Iron-rich): ரத்த சோகையைத் தடுக்க முட்டை, சிக்கன், மீன், கீரை மற்றும் பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்க்கவும்.
  • பால் அளவு: ஒரு நாளைக்கு 400–500 மி.லி பால் மட்டுமே போதுமானது. பாட்டிலில் கொடுப்பதைத் தவிர்த்து, டம்ளரில் (Cup) கொடுக்கவும்.
  • தவிர்க்க வேண்டியவை (No Junk): பாக்கெட் பிஸ்கட், சாக்லேட், சிப்ஸ், ஜூஸ் மற்றும் சர்க்கரை கலந்த பானங்களை முற்றிலும் தவிர்க்கவும்.
  • No Screen Feeding: டிவி (TV) அல்லது மொபைல் போன் காட்டிக் கொண்டே ஊட்டுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
  • சுய உணவு முறை (Self-feeding): சிதறினாலும் பரவாயில்லை, குழந்தையைத் தானாகவே கையில் எடுத்துச் சாப்பிட ஊக்குவிக்கவும்.
  • Fresh Food Only: ஃப்ரிட்ஜில் வைத்த அல்லது மீண்டும் சூடுபடுத்திய உணவுகளைக் (Reheated leftovers) கொடுக்க வேண்டாம். ஃபிரெஷ்ஷாகச் சமைத்த உணவே சிறந்தது.
நாள் காலை (Breakfast & Snack)
(8:00 AM & 11:00 AM)
மதியம் (Lunch)
(1:00 PM - நெய் கட்டாயம்)
மாலை & இரவு (Eve & Dinner)
(4:00 PM & 8:00 PM)
ஞாயிறு காலை: இட்லி + சாம்பார் (மிக்ஸியில் அரைக்காதது)

Snack: அவித்த முட்டை (முழுவதுமாக)
சாதம் + சிக்கன் அல்லது மட்டன் குழம்பு (கறி துண்டுகளுடன்) + ரசம் Snack: மாதுளை / பப்பாளி துண்டுகள்

இரவு: தோசை + தேங்காய் சட்னி
திங்கள் காலை: ராகி தோசை / இடியாப்பம்

Snack: வாழைப்பழம்
சாதம் + பருப்பு + நெய் + கீரை மசியல் (Greens) Snack: அவித்த முட்டை

இரவு: இட்லி + பால் / தக்காளி குழம்பு
செவ்வாய் காலை: பொங்கல் + காய்கறி சாம்பார்

Snack: வேகவைத்த சுண்டல் (நன்கு வெந்தது)
சாதம் + மீன் குழம்பு (முள் இல்லாத மீன் துண்டு) Snack: ஹோம் மேட் பிஸ்கட் / பால்

இரவு: சப்பாத்தி (மென்மையானது) + தால்
புதன் காலை: கோதுமை ரவை உப்புமா (காய்கறிகளுடன்)

Snack: அவித்த முட்டை
சாதம் + மசித்த சிக்கன் + தயிர் Snack: ஆப்பிள் துண்டுகள்

இரவு: ஊத்தப்பம் (கேரட் துருவியது)
வியாழன் காலை: சேமியா கிச்சடி / தோசை

Snack: வறுத்த வேர்க்கடலை பொடி + நாட்டுச்சர்க்கரை உருண்டை
சாதம் + சாம்பார் + நெய் + பீன்ஸ்/கேரட் பொரியல் Snack: சக்கரைவள்ளிக்கிழங்கு

இரவு: பருப்பு சாதம் / இட்லி
வெள்ளி காலை: சத்துமாவு கஞ்சி / ஆப்பம்

Snack: அவித்த முட்டை
தயிர் சாதம் + உருளைக்கிழங்கு வறுவல் (மென்மையாக) Snack: அவல் (ஊறவைத்தது) + வெல்லம்

இரவு: தோசை + சட்னி
சனி காலை: பூரி (எண்ணெய் வடித்தது) / இட்லி

Snack: பழச்சாறு அல்லது பழத்துண்டுகள்
காய்கறி பிரியாணி / நெய் சாதம் + குருமா Snack: வெஜிடபிள் சூப் / முட்டை

இரவு: ராகி அடை / இட்லி

👨‍⚕️ டாக்டர் பிரதீப் குமார் | கீத் கிட்ஸ் கிளினிக்
📞 9500690545 | 🌐 www.gheethkidsclinic.com

Gheeth Hospital : Best Pediatrician in Parassala

எங்கள் மருத்துவரை சந்திக்கவும்:

டாக்டர் பிரதீப் குமார்

MBBS, DCH, Dip. Diabetology​

Nutrition Counselling in person by Dr Pradeep Kumar

Whatsapp மூலம் குழந்தை உணவுமுறை குறித்த வழிகாட்டுதலைப் பெறுங்கள்.

What You Get for Free

எங்கள் Newborn தாய்மார்களுக்கான WhatsApp குழுவில் சேரவும்.

Free PDF Checklist: இலவச "குழந்தை வழிகாட்டி”

Access to replay + bonus resources from Dr. Pradeep Kumar